தமிழ் பேசாத மாநிலங்களில் ஆப்ஷனல் (மூன்றாவது) மொழியாக (விருப்ப மொழிப்பாடம்)தமிழை வைத்தால் அது பழமையான தமிழ் மொழிக்கு செய்கிற பெருந்தொண்டாக இருக்கும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதனன்று (ஜூன் 5) ட்விட்டர் பதிவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை வைத்தார்.